ஒரு ஏழை குடும்பத்தில் வரிசையாக 3 பெண் குழந்தைகள் பிறக்கின்றது. மூத்த பெண்ணை நீ ஏன் பெண்ணாக பிறந்தாய்! நீ பிறந்த பிறகுதான் எங்களுக்கு வறுமை வந்தது. ராசி இல்லாதவள் என்று அவளை சொல்லியே பெற்றோர்கள் நோகடித்தனர்.
மூத்த பெண்ணிற்கு திருமண வயது வந்தது. இவளை எங்கயோ கடை வீதியில் பார்த்த ஒரு நடுத்தர வாலிபன் இவள் மீது காதல் கொண்டு கண்ணியமான முறையில் பெண் கேட்டு சீதனம் இல்லாமல் திருமணம் செய்துக்கொண்டான்.
வறுமையின் பிடியில் வாழ்ந்தவள் எப்படி இருப்பாள்? அடக்கமும் இரக்க குணமும் கொண்டவள் குடும்பம் என்றால் என்ன. நன்றாக அறிந்தவள். என்னதான் அவள் குடும்ப பெண்ணாக இருந்தாலும் புகுந்த வீட்டில் இவள் ராசி இல்லாதவள் என்ற ஒரு பெயர் மட்டும் அழியாமல் இருந்தது.
கனவன் வேலைக்கு செல்லும்போது இவள் எதிரே நிற்கமாட்டாள். வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் இவள் முன்னே நிற்கமாட்டாள் இதையெல்லாம் கவனித்த கணவன் நீ ஏன் இப்படி ஒதிங்கிவிடுகிறாய்! நீ என் மனைவி. என் குடும்பத்தில் ஒருத்தி. என்று கணவன் கேட்க அவன் தோளில் சாய்ந்துக்கொண்டு என்னை மன்னித்துவிடுங்கள் நான் இராசி இல்லாதவள் என்று சொல்லி அழுகிறாள்.
கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. புதிதாக வீடு ஒன்று வாங்கினான். அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்தான். அப்போது அவன் மனைவியின் தந்தை புதையல் ஏதாவது கிடைத்ததா! என்றார். ஆமாம் உங்கள் பெண் எனக்கு மனைவியாக கிடைத்தால் என்றான் திமிராக. எல்லோரும் சிரித்தனர்.
உடனே தன் மனைவியின் பெயரை சொல்லி சத்தமாக அழைக்கிறான். அவள் கதவு அருகே நின்று வரமறுத்துவிட்டாள். இங்கு வா! தங்கமே!!! என்று கண்ணால் பேசினான். ஓடிவந்து அவன் அருகில் நிற்கிறாள். அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு
நான் இப்போது நல்லா இருக்க காரணம் என் மனைவி வந்த ராசி தான்.
என்றான் இப்படி ஒரு வார்தை யாரும் சொல்லி கேட்காதவள் சடார் என்று அவனை பார்த்து அந்த வீடே அதிரும் அளவிற்கு ஓஓஓ என்று கதறி அழுகிறாள். ஆமாம் அவள் மனதில் அப்படி ஒரு வலி இருக்கிறது.
மனைவி அழுவதை தாங்கிக்கொள்ள முடியாதவன் அவள் கண்ணீரை வேகமாக துடைத்து தன் மார்போடு அவளை அணைத்துக் கொண்டு என் மனைவி என்னுடன் இருக்கும் வரை எனக்கு எப்போதுமே இராசிதான் என்கிறான் இன்னும் சத்தமாக.
(இராசி. கைராசி. முகராசி. அகராசி. சொல் ராசி. எழுத்தாசி மற்றும் செவ்வாய் தோஷம் இது போன்ற மூடப்பழக்கத்தினால் இன்றும் நம் சமூக பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
இன்று நாம் எப்படி இருக்கின்றோம் அதுதான் உண்மை. நாளை நாம் எப்படி இருக்க போகிறோம்! அது நம் உழைப்பில் மட்டும்தான் இருக்கிறது. நம் வாழ்க்கை ரகசியங்களை பற்றி எவனோ ஒருவன் சொல்ல அவன் என்ன கடவுளா!!!.))
செம stroy 😍😍😍
ReplyDelete