Dec 5, 2017

தெரிஞ்சுக்கலாமா?...........

தெரிஞ்சுக்கலாமா?...........
நீங்கள் ஒருத்தரை ஒரு நிமிடம் முத்தமிட்டால் அதனால் நீங்கள் இருவரும் 2.6 கலோரியை எரிக்கிறீர்கள்.
மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது.
இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.
உங்களால் முக்கை மூடிக்கொண்டு 'ஹம்" செய்ய முடியாது.
நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.
பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.
இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர். இப்போது வழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும்.
நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்
காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான்.
உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.
ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.
மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது

No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you