Dec 7, 2017

மனம் எனும் மாய தேவதை - பாகம் 2 : மூளையின் 20 வாட்ஸ்

இந்நூற்றாண்டின் மிக பெரிய பிசிஸிஸ்ட மிச்சியோ காக்கு (michio kaku) ஒரு முறை ஒரு கருத்தை சொன்னார் மனித மூளையை பற்றி.
அதாவது ,"மனித மூளை...இந்த பிரபஞ்சத்தின் மிக சிக்கலான அமைப்பு...ஒரு மனித மூளையின் மொத்த செயல்பாட்டை அப்படியே மிமிக் பண்ண கூடிய ஒரு சூப்பர் கம்பியூட்டர் ஒரு வேளை கண்டு பிடிக்க பட்டால் அந்த கம்பியூட்டர் பார்க்க எப்படி இருக்கும் தெரியாது ஆனால் அதை இயக்க தேவை படும் நியூக்ளியர் எனர்ஜி சோர்ஸ் மட்டும் நிச்சயம் ஒரு நகரத்தின் அளவிற்கு மிக பெரியதாக இருக்கும். ஆனால் அவ்வளவு வேலையை செய்வதற்கு நமது மூளை தற்போது வெறும் 20 வாட்ஸ் பல்ப் அளவு திறனை மட்டுமே எடுத்து கொள்கிறது " என்றார்.
இவ்வளவு சக்தி வாய்ந்த கருவியை கொண்ட மனிதனுக்கு அந்த கருவி போதிய அளவு உதவுகிறதா என்றால் அதன் ஆற்றலை ஒப்பிடும் போது அது உதவுவது மிக குறைவு தான். நான் சொல்லுவது நமது அன்றாட வேலைகளுக்கு மூளை பயன்படுவது பற்றி அல்ல . நமது மூளை நமது அன்றாட வேலைகளை செய்யும் அளவு மட்டுமே பயன் படுத்துவது என்பது ராக்கெட் இன்ஜினை வைத்து பைக் ஓட்ட பயன் படுத்துவது போல. உண்மையில் அதன் ஆற்றல் வேறு விதமானது.
ஒரு உதாரணம் சொல்கிறேன்...
சுனாமி வந்து நூற்று கணக்கான மனித உயிர்கள் பிரிந்த போது அங்கே ஒரு ஆச்சர்யம். அதாவது அங்கே சுனாமியால் இறந்த மீன் அல்லது கால்நடைகளின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது. சில கட்ட பட்ட கால்நடைகள் தான் உயிரிழந்ததே தவிர மற்ற படி நிலத்திற்குள் வாழும் உயிரினங்கள் முதல் பறவைகள் வரை அந்த இயற்கை பேரழிவு வர போவதை உணர்ந்து முன் கூட்டியே இடத்தை காலி பண்ணி இருந்தது.
ஒன்றை யோசியுங்கள் ஒரு ஆட்டிற்கும் புறாவிற்கும் காக்காவிற்கும் பாம்பிற்கும் தெரியும் ஒரு விஷயம் மனித மூளையால் ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை. மூளை ஆற்றல் ஒப்பிடும் போது நிச்சயம் அவைகளை விட அதிக ஆற்றல் வாய்ந்த மூளையை தான் மனிதன் கொண்டிருக்கின்றான் அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அவனால் உணர முடியாமல் போனது எதனால்.? ஏன் அது பயன் படாமல் போனது.?
இதை புரிந்து கொள்ள முதலில் மூளையின் செயல் பாட்டில் ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு ஒரு கேள்வி. இந்த உள்ளுணர்வு என்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள். அது அதிகம் வேலை செய்வது பெண்களுக்கா அல்லது ஆண்களுக்கா ?
விடை : நிச்சயம் பெண்களுக்கு தான்.
ஊருக்கு கிளம்பும் கணவனிடம் மனைவி " என்னனு தெரிலங்க மனசு சரி இல்ல இன்னைக்கு போக வேணாம் நாளை போங்களேன் " என்று சொல்வதையோ வெளி ஊரில் தங்கி இருக்கும் மகனிடம் தாய் " ஒரு கனவு ஒன்னு கண்டேன் எதுக்கும் ஜாக்கறதையா இருப்பா " என்று சொல்வதையோ நாம் கேட்டு இருக்கலாம்.
இங்கே மூளையின் செயல் பாட்டை பற்றி ஒன்றை சொல்லியாக வேண்டும்.
நாட்டில் பல தர பட்ட வேலைகளை செய்ய அந்தந்த துறை தனி தனியாக இயங்குவதை போல . ஒரு கார் தொழிற்சாலையில் தனி தனி உதிரி பாகங்கள் தயாரிக்க தனி தனி பிரிவுகள் இயங்குவதை போல மூளையில் தனி தனி விஷயங்களுக்கு தனி தனி பகுதிகள் செயல் படுகிறது. நீங்கள் மிக தர்க்கரீதியாக ஒரு கணக்கை யோசிக்கும் போதும் ஓய்வாக ஒரு கவிதையை ரசிக்கும் போதும் மூளையின் ஒரே பகுதியை நீங்கள் பயன் படுத்துவது இல்லை.
மூளையில் முன்பு சொன்ன அந்த உள்ளுணர்வு எனும் துறை இயங்குவது எந்த பிரிவில் தெரியுமா ? அது தான் நமது உணர்ச்சியை கையாளும் பிரிவு.
அதாவது அதீதமாக உணர்ச்சிவச படுபவர்கள் அடிக்கடி உணர்ச்சியை கையாள்பவர்கள் இவர்களுக்கு தான் உள்ளுணர்வு அதிகம் வேலை செய்யும் காரணம் உள்ளுணர்வை தூண்டும் மூளை பகுதியை அவர்கள் தூண்டி விடுவதால் தான். இயல்பாகவே உணர்ச்சி விஷயத்தில் பெண்கள் ஆண்களை விட அதிகம் முந்தியவர்கள் என்பதால் intution எனப்படும் உள்ளுணர்வு அந்த ...'ஏதோ பட்சி சொல்லுது 'என்பது பெண்களுக்கு அதிகம்.
உணர்ச்சியை கையாலாத ஒருவன் அதனுடன் சேர்ந்து இருக்கும் மூளையின் மற்ற செயல்பாட்டிலும் பின் தங்கி விடுகிறான்.
பணத்தை அதிகம் செலவு செய்யாத மகா கஞ்சன் அல்லது கருமியை நீங்கள் சந்தித்து இருக்கலாம். அவனை பற்றி ஒரு ஆச்சர்யத்தை இப்போது சொல்கிறேன்.
அவனுக்கு நல்ல பெண் துணையை உண்டு பண்ணி பாருங்கள் மேஜிக் பண்ணியது போல அவன் கஞ்ச தனம் மறைவதை பார்க்கலாம். பெண்கள் பொதுவாக செலவு வைப்பவர்கள் என்ற சாதாரண உலகியல் உண்மை பற்றி நான் பேச வில்லை. நான் சொல்வது மிகுந்த மனோரீதியான ஒரு விஷயம். அதாவது ஒருவனுக்கு பெண் மீது கொள்ளும் ஆசை தான் வேறு வடிவில் திரிந்து பண ஆசையாக மாறுகிறது என்று மனோத்துவம் சொல்கிறது. அப்படி பட்டவர்கள் தினம் இரவு பணத்தை என்னும் போது நீங்கள் பார்க்க நேர்ந்தால் இதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
ரூபாய் நோட்டை அவர்கள் ஒரு பெண்ணை தொடுவதை போல மிக உணர்வு பூர்வமாக தொட்டு தடவி எண்ணுவார்கள். நாணயம் என்றால் அதன் ஒலியை கூட ரசித்து கேட்பார்கள். தினம் அதை தடவி பார்ப்பார்கள் ஆனால் அதை செலவு செய்ய பகிர மனம் வராது . பின்ன... தனது கேர்ள் பிரண்டை பகிர யாருக்காவது மனம் வருமா ? எனவே அவர்களுக்கு நிஜ பெண் நண்பி கிடைத்தால் படி படியாக பணத்தை தடவுவது குறைந்து போகும். அந்தளவில் மூளையில் இரண்டுக்கும் ஒரு தொடர்பு உண்டு.
இதே போன்ற இனொன்றை சொல்கிறேன் கேளுங்கள். உங்களில் யாருக்காவது மிகுந்த அச்சம் அல்லது காரணம் அற்ற பயம் ஆட்கொள்கிறதா ? நான் சொல்வதை செய்து பாருங்கள்.
தன்னிடம் "மிகுந்த பயமா இருக்கு ஏதாவது வழி சொல்லுங்க " என்று வருபவர்களிடம் ஓஷோ அவர்கள் பின் பற்றிய வழி முறை இது.
அதாவது அவர்களுக்கு ஓரிரண்டு பஞ்சு தலையணையை கொடுத்து ஒரு அறை க்கு அனுப்புவார் . அவர்களது வேலை அந்த பஞ்சு தலையணையை அடி அடி என அடித்து தூள் தூள் ஆக்க வேண்டும் ஒன்று முடிந்ததும் அடுத்த தலையணை. எத்தனை முடியுமோ அத்தனை. அப்படி அடித்து துவம்சம் செய்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தவர்கள் தங்களின் அச்சம் பயம் காணாமல் போன தலைவலி போல மாயமாகி இருந்ததை பார்த்து அதிசயித்தார்கள் .
தலையணை எப்படி அச்சத்தை போக்கியது என்றால் அதுவும் ஒரு மூளை தொடர்பு தான்.
அந்த தொடர்புகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதன் மூலம் தான் நாம் பல விஷயத்தை பயன் படுத்தாமல் விட்டு வருகிறோம். முழு மக்கா சோளத்தில் ஒரே ஒரு கடி கடித்து தூக்கி போடுவது போல மூளையில் ஒரு குறிபிட்ட பகுதி பயன் பாட்டோடு நிறுத்தி கொள்கிறோம்.
பயன் படுத்தாத பொருட்கள் கால போக்கில் மங்கி போகும் என்பது இயற்கை விதி. அப்படி மூளையை பல இடங்களில் சரியாக பயன் படுத்தாமல் விட்டதன் விளைவு இன்று மிருகங்களின் உணர்வு நிலையை விட நாம் நிறைய பின் தங்கி விட்டோம்.
ஆ..மாம் அவைகளை நாம் தவற விட்டது எப்போது ?
சொல்கிறேன்........
தொடர்ந்து சிந்திப்போம்



No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you