2001ம் ஆண்டு ஷில்போல்டனில் உருவான முக அமைப்புடைய பயிர் வட்டம் தோன்றியதற்கு சரியாக ஒரு வருடத்தின் பின்னர், 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி, இங்கிலாந்து க்ராப்வூட் (Grabwood) நகரத்தில் இந்தப் பயிர் வட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை ஏலியன்களின் முகங்கள் எப்படி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் நாம் இருந்தோமோ, அதே முகச் சாயலுடன் கூடிய பயிர் வட்டச் சித்திரமாக அது உருவாக்கப்பட்டு இருந்தது. அத்துடன் வட்டவடிவமான ஒருவித வினோத வடிவமும் அந்த உருவத்துடன் இணைந்து காணப்பட்டது. வட்டத்திற்குள் பல வட்டங்களாக அது அமைந்திருந்தது. அந்த வட்டங்கள் எதைக் குறிக்கிறது என்று ஆராய்ந்தபோது, அது நாம் தற்சமயம் உபயோகிக்கும் சிடி(Compact Disc) போல இருக்கலாமோ எனச் சிந்திக்கத் தோன்றியது. சிடியில் எப்படி தகவல்கள் பதியப்பட்டிருக்கலாமோ, அது போல அந்த வட்டத்திலும் தகவலாக செய்திகள் இருக்கலாம் என்ற சந்தேகத்துடன், அதை ஆராய்ந்தபோது உண்மையிலேயே அதில் அப்படியே செய்திகள் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வட்டவடிவமாக இருந்த பயிர் வட்டத்தில் இருந்த செய்தி என்ன தெரியுமா? அது இதுதான்........!
"Beware the bearers of FALSE gifts & their BROKEN PROMISES.Much PAIN but still time.BELIEVE.There is GOOD out there.We oPpose DECEPTION.COnduit CLOSING"
"ஏலியன்களில் இரண்டு வகையினர் இருப்பதாகவும், அதில் ஒரு வகையினர் நல்லவர்கள் என்பதாகவும், கெட்டவர்களின் வார்த்தைகளை நம்பி நாம் ஏமாறக் கூடாது" என்ற எச்சரிக்கையாக அந்தச் செய்தி இருந்தது. இதைப் பர்த்ததும் நிச்சயமாக உங்களுக்கு சிரிப்பதா? நம்புவதா? என்பதே பெரிய கேள்வியாக இருக்கும். பலருக்கும் அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் அது உருவாக்கப்பட்ட விதத்தில் நம்ப வேண்டிய சூழ்நிலைகளே அதிகம் இருக்கின்றன. இந்தச் செய்தியில் உள்ளது போல, நாம் யாரிடம் கவனமாக இருக்க வேண்டும்? இந்தச் சித்திரத்தில் இருக்கும் உருவ அமைப்புள்ளவர்களிடமா அல்லது அதில் சொல்லப்பட்ட நல்லவர்கள்தான் இந்தச் சித்திரத்தில் இருப்பவர்களா? எந்த விபரமும் அங்கு இல்லை. இருந்தவை எல்லாமே ஆச்சரியமும், மர்மமும் மட்டுமே! ஒரு பேச்சுக்கு இதை மனிதர்களே உருவாக்கினார்கள் என்று நாம் எடுத்தோமானால், உருவாக்கிய அந்த மனிதர்களின் மோசமான நகைச்சுவையுணர்வை என்ன என்று சொல்வது? ஆனால் பலர் இதை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்பதை நம்ப மறுக்கிறார்கள். காரணம், அதில் உள்ள சாத்தியக்கூறுகள் மனிதனால் உருவாக்கக் கூடியதாக இருக்கவில்லை என்பதுதான். இதில் இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த சித்திரமும் ஒரு தொலைக்காட்சிக் கோபுரம் அமைந்த இடத்துக்கு அருகில்தான் உருவாக்கப்பட்டிருந்தது.
இங்கு நாம் ஒன்றைச் சரியாகக் கூர்ந்து பார்த்தோமானால், பயிர் வட்டங்களில் மிக முக்கியமானவை அனைத்துமே இங்கிலாந்தில், குறிப்பாக தெற்கு இங்கிலாந்திலேயே காணப்படுவது தெரியவரும். இதுவரை உலகம் முழுவதும் பத்தாயிரத்துக்கு அதிகமான பயிர் வட்டங்கள் உருவாகியிருந்தாலும், தெற்கு இங்கிலாந்தில்தான் எண்பது சதவீதமான பயிர் வட்டங்கள் உருவாகியிருக்கின்றன. அது ஏன்? அப்படி என்னதான் இந்த இடத்தில் விசேசம் என்று பார்த்தபோது அங்கும் நமக்கு ஆச்சரியமான ஒரு தகவல் கிடைத்தது.
ஆம்! நம்பவே முடியாத ஆச்சரியம் ஒன்று அந்த இடத்தில் இருக்கத்தான் செய்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஒரு வட்டம்தான் அந்த ஆச்சரியம். ஆனால் நீங்கள் நினைப்பது போல அது ஒன்றும் பயிர்களால் உருவாக்கப்பட்ட வட்டம் கிடையாது. கற்களால் உருவான வட்டம். கற்கள் என்றால் சின்னக் கற்கள் கிடையாது. ஒவ்வொன்றும் நூறு டன்களுக்கு அதிகமான எடையுள்ள கற்கள்.உலகில் புராதன அதிசயமாகப் பார்க்கப்படும் முக்கிய அடையாளம் அது. அதன் பெயர் 'ஸ்டோன்ஹெஞ்ச்' (Stonehenge).
ஸ்டோன்ஹெஞ்ச் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது நிறையவே உண்டு. அது எப்படி உருவானது? யாரால் உருவானது? என்ற கேள்விகளுக்கும், பயிர் வட்டங்களுக்கும் ஸ்டோன்ஹெஞ்ச்சுக்கும் சம்பந்தம் உண்டா என்ற கேள்விகளும் இப்போது நம்மிடையே தோன்றியுள்ளன.
No comments:
Post a Comment
Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you