Dec 12, 2017

வாழ்க்கையில் செல்லும் வழியெங்கும்
விட்டுவிட்டுப் போகிறோம்
தவிர்க்கமுடியாத சில தடயங்களை....!
பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணிப்போல்
பலஇடங்களில் பதிந்துவிடுகிறது
தடயங்களாய் நமது தவறுகள்...!
அதை ஏற்கவும் சரிசெய்துக்கொள்ளவும்
எப்போதும் இடம்கொடுப்பதில்லை
நம் தன்மானங்கள்...!
நாம்செய்த தவறுகளையே
சரியென்று நியாயப்படுத்திவிட்டு
தவறுகளோடே நகர்கிறது வாழ்க்கை...!
முதுகை திரும்பிப்பார்க்க முயலுவதில்லை யாரும்
முதுகு என்பதை நம் மறுப்பக்கம்
என்று கொள்ளாதவரை...!


No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you